--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

4

அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் நிலவும் வளிமண்டல சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon