--- --:--:-- --

சொகுசு பேருந்தில் நகை திருடிய திமுக பிரமுகர்..!

2

செங்கல்பட்டு மாவட்டத்தில் சொகுசு பேருந்தில் நகை திருடிய திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜான்சன் தனது மனைவியுடன் நெல்லைக்கு பேருந்தில் சென்று உள்ளார். அச்சரப்பாக்கம் அருகே உள்ள உணவகத்தில் பேருந்து நின்றபோது சாம்சன் உட்பட அனைவரும் உணவருந்த சென்றுள்ளனர்.

 

திரும்பி வந்த போது தன் பையிலிருந்த ஏழரை பவுன் நகைகள் களவு போனது தெரிய வந்ததால் சாம்சன் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது அதே பகுதியை சேர்ந்த திமுக இளைஞர் அணி நகர துணை செயலாளருமான தமீம் பேருந்துக்குள் புகுந்து நகைகளை திருடியது தெரியவந்தது.

 

தமீமை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து நகைகளை மீட்டு உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon