8 மாவட்டங்களில் கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , சென்னை, கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய கடலோர மாவட்டங்கள் சென்னை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு