கோவை : கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி. கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் !!!
கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கோழி,வாத்துகள் மர்ம முறையில் இறந்தன. இறந்த வாத்துகளை சோதனையிட்ட போது அதற்கு பறவை காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி,வாத்துகள் மற்றும் அதன் முட்டை, இறைச்சிகள் கொண்டு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,தமிழகம் முழுவதும் 6 மாவட்டங்களின் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,கேரளாவில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள நிலையில் கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், ஆனைகட்டி, பொள்ளாச்சி முத்துக்கவுண்டனூர், வடக்குகாடு, மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும்,வாளையாறு எல்லையில் வரும் சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளித்து சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.






