ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும்..!

ரசியலுக்கு வருவது இல்லை எனும் ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள்.

 

கமல் மக்கள் நீதி மைய கட்சியை தொடங்கிய நிலையில் நடிகர் ரஜினி 31ஆம் தேதி தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

 

எனவே அவர்தான் கட்சி தொடங்க விரும்பவில்லை என்றும் தன்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும் தன் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே கமல்ஹாசன் ரஜினி நலமாக இருக்க வேண்டும் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply