--- --:--:-- --

அம்பேத்கருக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது; அவர் அனைவருக்குமானவர் – மேயர் பிரியா

6

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அம்பேத்கர் படம் இடம் மாற்றி வைக்கப்பட்டதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த மேயர் பிரியா, அம்பேத்கர் படம் தற்போது இருந்த இடத்தில் ஏற்கெனவே வைக்கப்பட்டதில்லை என்றும், மாநகராட்சி அரங்கில் அம்பேத்கர் படத்தை திமுகதான் இடம்பெறச் செய்தது என்றும் தெரிவித்தார்.

 

 

மேலும், அம்பேத்கருக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், அவர் அனைவருக்குமானவர் என்றும் கூறிய மேயர் பிரியா, அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி திமுக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார். மேயர் பிரியா விளக்கம் அளித்த பின்னரும் விசிக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாகவும், இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon