இன்று பிறந்தநாளை கொண்டாடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது 55 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் கர்னல் பகுதியில் உள்ள வீட்டில் கேக் வெட்டிய காட்சிகளை சல்மான்கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

வாழ்த்துக் கூறி ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.


Leave a Reply