--- --:--:-- --

சிவகங்கையில் வெள்ளாளர் பெயரை பாதுகாக்க வலியுறுத்தி அரண்மனை வாசல் முன்பு 500 க்கு மேற்பட்டோர் போராட்டம்

16

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் முன்பு வெள்ளாளர் அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழகம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர் இதனைத்தொடர்ந்து சில நாட்கள் முன்பு சிவகங்கை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேவேந்திரகுல வேளாளர் என குடும்பன் காலடி பண்ணாடி பள்ளன் வாதிரியார் உள்பட 7 பிரிவைச் சேர்ந்தவர்களை வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்,

இதனைத் தொடர்ந்து வெள்ளாளர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தமிழகம் முழுவதும் வெள்ளாளர் வேளாளர் இரண்டுமே தங்களுடைய இனத்தைச் சார்ந்தது அதனை வேற யாருக்கும் கொடுக்க கூடாது என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனை வாசல் முனு 500க்கும் மேற்பட்ட வெள்ளாளர் இன சமுதாயத்தினர் போரட்டம் செய்தனர். போராட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

 

மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து வெள்ளாளர் சமுதாயத்தினர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon