--- --:--:-- --

டெல்லி, ராஜஸ்தான், மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு..!

4

டெல்லி, ராஜஸ்தான், மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதியில் கட்டடங்கள் குலுங்கியுள்ளன.

 

இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். முன்னதாக மணிப்பூரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலம் சூரத் பகுதியில் நேற்றிரவு 10.03 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இதே போன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 64 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது .

 

இந்த நில அதிர்வு ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon