திரைப்பட சூட்டிங்க்காக ஹைதராபாத் செல்லும் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா..!
நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட சூட்டிங்கிற்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். தனி விமானம் மூலம் படக்குழுவினருடன் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை பழைய விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் அங்கு காத்திருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவுடன் சென்றுள்ளார். இதற்கிடையே ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்து இருப்பதால் வருகிற 29-ஆம் தேதி சென்னை வந்து விட்டு பின்னர் ஓரிரு நாட்களில் ஹைதராபாத் திரும்புவார் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.






