--- --:--:-- --

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை துடியலூரில் மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

0.2

த்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கொட்டும் பனியிலும்,வாட்டும் கடும் குளிரிலும் விவசாயிகள் இன்று 10 வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதுவரை இரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.இந்த நிலையில் இன்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

 

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூரில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

வளர்க்காதே,வளர்க்காதே.விவசாயிகள் வயிற்றில் அடித்து பெரு நிறுவனங்களை வளர்க்காதே என்பது போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர் உட்பட 200 க்கும் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon