கணவனின் 4 வது திருமணத்திற்காக பெண் தேடும் 3 மனைவிகள்..!
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறக்கூடிய புனிதமான நிகழ்வு. அந்த புனிதமான நிகழ்வு இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு நடக்காமல் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் என்ற பகுதியில் உள்ள 20 வயதான ஒருவர் மூன்று திருமணம் செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் நான்காவது திருமணம் நடக்க வேண்டும் என்று தனது மூன்று மனைவிகளிடமும் இடம் பிடித்துள்ளார்.
முதல் மனைவி பெயர் சீமன், இரண்டாவது மனைவியின் பெயர் சபானா, மூன்றாவது மனைவி பெயர் சாகிசா. இந்த மூன்று மனைவிகளின் பெயரும் எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் நான்காவது மனைவி பெயரும் என்று எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டுமென தன்னுடைய மூன்று மனைவிகள் இடமும் மனு கொடுத்துள்ளார்.
இதனால் மூன்று மனைவிகளும் மிகவும் கோபமாகி தனது கணவரை அடித்து டைவர்ஸ் வாங்கி கணவருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பார்த்தால் அம்மாதிரி எதுவும் நடக்காமல் கணவருடைய சந்தோஷம்தான் தங்களின் சந்தோஷம் என்று கூறி என்ற பெயரிலேயே தங்களுடைய கடவுளுக்கு பெண் பார்த்து வருகின்றனர்.
ஒரு சிலர் ஒரு திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சிலபேர் திருமணமே நடக்காமல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆனால் இவர் நான்கு திருமணம் செய்து கொண்டு எப்படி பிரச்சனையே இல்லாமல் இருக்கிறார் என்பது அனைவருக்கும் கேள்வியாக உள்ளது.






