தெருவெங்கும் குப்பைகள் கழிவுநீர் தொற்றுநோய் பரவலாம் என்ற அச்சத்தில் போகலூர் ஊராட்சி மக்கள்
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சத்திரக்குடியில் அமைந்துள்ள. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகமும் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்திரக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் அனைவரும் இங்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.
மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அன்றாட குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வது கிடையாது என்று இப்பகுதியில் உள்ள மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தெருவெங்கும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது என்பதை கண்கூடாக காணமுடிகிறது ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






