இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்கிய ஓலா நிறுவனம்…!
மின்சாரத்தில் இயக்கப்படும் இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்குவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுடன் ஓலா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வாடகை கார் நிறுவனமான ஓலா முதன்முறையாக வாகன உற்பத்தியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
மிகப்பெரிய இ ஸ்கூட்டர் தொழிற்சாலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய நிலையில் பல்வேறு மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்து பேச்சுவார்த்தையில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.






