சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட வெங்காய வெடி வெடித்து சிதறியது..!
புதுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மறைத்து எடுத்து வரப்பட்ட வெங்காய வெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். கிச்சடி கிராமத்தில் சாலையோர டீ கடைக்கு தண்ணீர் குடிக்க வந்த இரண்டு பேரில் ஒருவன் கையில் வைத்திருந்த பையில் இருந்து விழுந்த வெங்காய வெடி திடீரென வெடித்து சிதறியது.
அதில் அந்த பையில் வைத்திருந்த ராஜா என்ற நபர் காலில் காயமடைந்தார். டீக்கடையில் இருந்தவர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். ராஜாவுடன் வந்த வீரா என்ற நபர் தப்பி ஓடிய நிலையில் அவர்கள் எங்கிருந்து வெங்காய வெடியை வாங்கி வந்தனர் என விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





