--- --:--:-- --

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் 78வது வயதில் காலமாகியுள்ளார்..!

25

சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து எடுத்த லீ குன் ஹீ தனது 78 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1987இல் சிறிய தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சாம்சங் லீயின் கடின முயற்சியால் அடுத்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியது.

 

மொபைல் போன் தயாரிப்பு துறையில் கால்பதித்த சாம்சங் நிறுவனம், நோக்கியா, சோனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பின்னுக்கு தள்ளி உலகளாவிய சந்தையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது.

 

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட லீ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon