--- --:--:-- --

கோவை மாவட்டம் க.க.சாவடியில் உள்ள ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் !!!

0.6

தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடி அருகே உள்ள ஆர்.டி.ஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது,ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் இருந்து கணக்கில் வராத 91 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவி ஆய்வாளர் அருள் மற்றும் அலுவலக உதவியாளர், மற்றும் இடைத்தரகர் சரவணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்சம்பவம் கோவையில் மற்ற ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon