திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம்..!
திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம் திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த இரண்டு மாதமாக நடந்து வருகிறது.

முகாமில் கபாடி பயிற்சியாளர்கள் எம் ஜி தாஸ் மற்றும் ராஜன், ராஜா, மதுமிதா ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதில் திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 56 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இப்பயிற்சியானது பள்ளிகள் திறக்கும் வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.






