--- --:--:-- --

அதிகரிக்கும் வெங்காயத்தின் விலை..! 100 ரூபாயாக உயர்வு..!

5

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் ஆகவும் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் விலை கிலோ 110 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

 

கோயம்பேடு சந்தைக்கு மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து லாரிகளில் பெரிய வெங்காயம் வந்த நிலையில் தற்போது 25 முதல் 30 லாரிகளில் கொண்டு வரப்படுவதாக அந்த மாநிலங்களில் கனமழை பெய்வதால் வரத்து குறைந்து இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால் நேற்று 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை என பெரிய வெங்காயம் இன்று 90 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் இதேபோல நேற்று90 ரூபாயாக இருந்த சின்னவெங்காயம் விலை இன்று 110 ரூபாய் ஆக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த விலை உயர்வு நீடிக்கவே வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறியிருக்கும் நிலையில் விலை உயர்வுக்கு பதுக்கலும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon