விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கனிமொழி கடும் கண்டனம்..!
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஆபாசமான மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நபர் ஒருவர் விஜய் சேதுபதி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டு இருப்பதோடு அவரது மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக புகார் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் மகளுக்கு எடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல் காட்டுமிராண்டித் தனமானது என்று திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது தான் கோளைகளுக்கு தெரிந்த ஒரு ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.






