--- --:--:-- --

சென்னை மாணவர் ஒருவருக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் என முடிவு வந்ததால் குழப்பம்..!

1

சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நீட் விடைத்தாள் சுய மதிப்பீட்டில் 517 மதிப்பெண்கள் கிடைத்த நிலையில் தேர்வு முடிவுகளில் 0 என்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மாணவர் 12 ஆம் வகுப்பில் 516 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

 

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதி முடிவுக்காக காத்திருந்தா அவர் ஓ‌எம்‌ஆர் ஷீட் நகல் மற்றும் விடைத்தாள் குறிப்புகளைக் கொண்டு சுய மதிப்பீடு செய்வதில் 517 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கணக்கிட்டு வைத்திருந்தார். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான போது அவருடைய மதிப்பெண்கள் 0 என வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

 

அதுமட்டுமில்லாமல் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பதிவேற்றப்பட்ட விடைத்தாள் மாறி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சென்று தேசிய தேர்வு முறைமையில் புகார் அளிக்க இருப்பதாகவும் அவரின் பெற்றோர் கூறுகின்றனர்.

 

இதேபோல சென்னையை சேர்ந்த மாணவி ஒருவருக்கு 8 மதிப்பெண்கள் வழங்கப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon