வெங்காயம் விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது..!
சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 50 முதல் 60 லாரிகளில் 1050 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில தினங்களாக வரத்து பாதியாக குறைந்து 20 முதல் 30 லாரிகளில் 600 முதல் 700 டன் மட்டும் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதேபோல் வரத்து குறைவு, பதுக்கல் போன்ற காரணத்தால் சின்ன வெங்காயம் விலையும் 50 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல கேரட், முட்டைக்கோஸ், உருளை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.






