--- --:--:-- --

சசிகலா தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கடிதம்..!

10

சசிகலாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்த நிலையில் தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தான் வணங்கும் கடவுளின் ஆசியோடும், தன் உடன் பிறவா சகோதரி ஜெயலலிதாவின் ஆசியோடும், ஒரு கோடி கணக்கான தொண்டர்களின் வாழ்த்துக்களோடும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

சிறையில் தனது நன்னடத்தை விவகாரத்தில் சட்டரீதியாக முடிவு எடுப்பார்கள் என நம்புவதாகவும் முறைப்படி அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவகாரத்தில் கியூரட்டிவ் மனு தாக்கல் செய்வது இயலுமா என்பதை மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்து டிடிவி தினகரன் ஆலோசித்து செயல்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon