தோனி போட்டிகளை எதிர் கொள்வதற்கான முழுத் தகுதியோடு இல்லை..!
மகேந்திர சிங் தோனி போட்டிகளை முழுவீச்சில் எதிர் கொள்வதற்கான முழுத் தகுதியோடு இல்லை என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார். வயதுக்கும், உடல் தகுதிக்கும் சம்பந்தமில்லை என கூறியவர் தோனி இப்பொழுது உடல் ரீதியாக நல்ல தகுதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் போட்டிகளுக்கான பிட்நசில் தோனி சுணக்கம் காட்டுவதாகவும், அவரால் பழைய ஃபார்மில் ஜொலிக்க முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.






