--- --:--:-- --

தனக்கு கதாநாயகனுக்கான முகம் இல்லை எனக்கூறிய நடிகர் யோகி பாபு..!

2

தனக்கு கதாநாயகனுக்கான முகம் இல்லை என்றும் தான் எப்போதும் காமெடியன் தான் எனவும் நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பேய்மாமா என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் யோகிபாபு, இயக்குனர் மிஷ்கின், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு தனக்கு ஹீரோ கதாபாத்திரத்திற்காக முகம் இல்லை என தெரிவித்தார்.

 

வடிவேலு ஒரு மேதாவி என்று அவர்கள் எழுதிய பேய்மாமா கதை தனக்காக மாற்றி எழுதப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon