--- --:--:-- --

நாச்சியேந்தல் கிராமத்தில் பெற்ற தாயே இரண்டு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்தாரா?

9.1

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. இவர்களுக்கு 3வயது பெண் குழந்தை நியாசந்தோஸ்கா, ஒரு வயது ஆண் குழந்தை சாய் கிருஷ்த்திகேஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாச்சியந்தேல் கிராமத்தில் வீட்டின் எதிரே உள்ள தாமரைகுளத்தில் குழந்தைகளை தாய் சுகன்யா நீரில் முழ்கடித்து கொலை செய்தார் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள் காணாததை கண்டு கணேசன் பெற்றோர்கள் கேட்ட போது அருகில் படுத்திருப்பதாக கூறி தலையணை போட்டு வைத்திருந்தது கண்டும்.

 

சுகன்யாவின் உடைகள் நனைந்திருந்ததை அறிந்து  கண்மாயில் தேடிய போது குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டதுடன் திருவாடானை காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக திருவாடானை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon