--- --:--:-- --

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்..!

6

இந்தியாவுக்கு வெளியே பொருட்கள் அனுப்புவதில்லை என்று நாகலாந்து வாடிக்கையாளர்களுக்கு பதில் கூறிய பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

 

திமாபூர் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏன் பொருட்களை வழங்குவது இல்லை என பிளிப்கார்ட் நிறுவனத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே தங்கள் பொருட்களை வழங்குவது இல்லை என பதில் கூறியிருந்தது.

 

இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பலரும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு தவறு நடந்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon