சிக்னல் கிடைக்காமல் தவித்த மாணவர்களுக்கு சொந்த செலவில் மொபைல் டவர் வைத்த சோனு சூட்..!
ஹரியானாவில் சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைகிராம மாணவர்களுக்காக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்து உதவியுள்ளார். மோர்னி எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி செல்போன் சிக்னல் கிடைக்காமல் மரத்தின் மீது உட்கார்ந்து ஆன்லைன் வகுப்புகள் கவனிப்பது போன்ற வீடியோ வைரல் ஆனது.
இதையறிந்த சோனு சூட் மாணவர்கள் சிலர் வகுப்புகளை கவனிக்க ஏதுவாக அந்த கிராமத்தில் மொபைல் டவர் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.






