--- --:--:-- --

அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லையா..!

12

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக்காட்டி கடந்த சில ஆண்டுகளில் அவர் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தி இருப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. 2016 முதல் 2017ஆம் ஆண்டில் அவர் 7750 டாலர் மட்டுமே வரி செலுத்தி உள்ளார் என்றும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளில் அவர் வரியே செலுத்தவில்லை என்றும் வருமானவரி ஆவணங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தவறான செய்தி என்று டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். பல மில்லியன் டாலர் வரி செலுத்தி இருப்பதாகவும் டிரம்ப் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆலன் விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon