வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாராட்டை பெற்ற சோபியா நாய்..!
சத்தீஷ்கர் மாநிலத்தில் மோப்ப நாய் ஒன்று சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாராட்டைப் பெற்றுள்ளது. மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டம் உள்ள ராஜ்நிகண்ட் மாவட்டத்தில் இந்திய திபெத் எல்லைக் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .
அவர்களுடன் சோபியா என்ற மோப்ப நாயுடன் அழைத்து செல்லப்பட்டது. அந்த வழியில் போடப்பட்டு கொண்டிருந்த சாலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது முன்னால் சென்ற சோபியா அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ எடையுள்ள அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடித்தது.
இந்த குண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறிய பாதுகாப்பு படையினர் சோபியாவை வெகுவாக பாராட்டினார்.






