கள்ளச்சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 8 பேர் உயிரிழப்பு..!
ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கள்ளச் சாராயம் வாங்கி வந்து குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் குடித்த இடத்திலிருந்து கிருமிநாசினி பாட்டில்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே அதிக போதைக்காக கள்ளச்சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்துள்ளனர். எங்கிருந்து கள்ளச்சாராயம் வாங்கினார்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






