--- --:--:-- --

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது.!

12

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞனை தர்ம அடி கொடுத்து பொதுமக்களை போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

ராகுல் என்பவன் நள்ளிரவில் குடிபோதையில் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

 

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவனை பிடித்து ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர், விசாரணையில் அந்த பகுதி பெண்களிடம் அடிக்கடி அத்துமீறி நடந்து கொள்வதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநில பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon