இந்தியா – சீனா எல்லை..! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு..!

சீனா உட்பட இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன் வர்த்தக பரிமாற்றத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்போ உள்நாடு தேவைகளுக்கு இந்தியா சீனாவை சார்ந்து இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

 

இதனையடுத்து சீனாவிற்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிற்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோர விரும்பும் அண்டை நாட்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் சம்மந்தப்பட்ட துறையில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தகுதியான நிறுவனமா என்பதை வர்த்தக அமைச்சகம் முடிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 31-ஆம் தேதி வரை கொரொனா தடுப்பிற்கு மருந்து பொருட்களை வாங்குவது உட்பட வரையறுக்கப்பட்ட சிலவற்றில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சில பகுதிகளில் இருந்து சீனப் படைகள் பின்வாங்காமல் காலம் தாழ்த்துவதால் நெருக்கடி கொடுக்கும் வகையில் புதிய வர்த்தக விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.


Leave a Reply