மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். மாநிலங்களவையில் 61 காலி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 6 பேர் உட்பட 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 10 மாநிலங்களில் 19 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜி கே வாசன் மற்றும் திமுக சார்பில் திருச்சி சிவா, என்ஆர் இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத புதிய உறுப்பினர்களுக்கு மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். அதேபோல பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறுப்பினர்களில் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சமூக இடைவெளியுடன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.