300 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஒட்டி வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

கர்நாடகாவில் கொரொனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகர் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் 1000 சிசி திறன் கொண்ட தனது யமஹா பைக்கை 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிய அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து இளைஞரின் முக வரியை கண்டுபிடித்த போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply