கர்நாடக மாநிலத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். கொலை நடந்த இடத்திற்கு ஒன்பது வயதான போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அங்கிருந்து ஓடிய மோப்பநாய் சூலெக்ரேயிலிருந்து 2 மணி நேரம் விடாமல் ஓடி சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசிபுரா தண்டா கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு போய் நின்றது. அந்த வீட்டில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெயர் சேத்தன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பரான சந்திரா என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். திருட்டு நகைகளை பங்கு பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் சந்திரா நாயக்கை சேத்தன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. அந்த மோப்ப நாயின் பெயர் துங்கா.
மோப்ப நாய்க்கு மாநில போலீஸ் கூடுதல் டிஜிபி துங்காவுக்கு மாலை அணிவித்து பாராட்டினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.