கொரொனா பாதித்த பெண்ணை வீட்டில் அனுமதிக்க மறுத்த சகோதரர்கள்..!

ஆந்திராவில் கொரொனா பாதிப்புக்குள்ளான பெண்ணை சகோதரர்கள் வீட்டில் அனுமதிக்க மறுத்ததால் அவர் சாலையில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கிழக்குபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ரமணம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

 

இவர் நெல்லூரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு கொரொனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளுக்கு படுக்கை காலியாக இல்லை எனக் கூறி அந்தப் பெண்ணை மருத்துவர்கள் வெளியேற்றி விட்டனர்.

 

இதனையடுத்து சகோதரர்கள் வீட்டிற்கு சென்ற அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் சாலையில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்சினையில் ஆந்திர அரசு தலையிட்டு ரமணம்மாவை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply