கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின்துறை அமைச்சர் தங்கமணி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வைரஸ் தொற்று உறுதியானதால் கடந்த எட்டாம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தங்கமணி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண குணம் அடைந்து விட்டதால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பினார். அமைச்சர் தங்கமணியை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஏற்கனவே உயர்கல்வி அமைச்சர் கேபி அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேர் வைரஸ் தொற்று உறுதியாகி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.