மனிதனிடம் தண்ணீர் கேட்கும் அணில்…வைரல் வீடியோ..!

அணில் ஒன்று சாலையில் சென்றவரிடம் தண்ணீர்கேட்டு மன்றாடிய வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் சாலையில் செல்லும் சிறுமி மற்றும் அவரது உறவினரை கண்டு ஓடி வரும் அணில் ஒன்று தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீரை கேட்கிறது.

 

முதலில் அந்த நபர் பின் வாங்கினாலும் தண்ணீர் கேட்டு கெஞ்சும் நிலை கண்டு தான் வைத்திருந்த நீரைக் கொடுக்கிறார். அடுத்த நொடி தாகத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த அந்த அணில் பாட்டிலை பிடித்துக்கொண்டு தண்ணீர் குடிக்கிறது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply