உத்திரபிரதேச மாநிலம் மதுரா நகராட்சி கூட்டத்தில் நகராட்சி ஆணையரை பாஜக பெண் கவுன்சிலர் காலணியால் உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் தீபிகா ராணிசிங் தனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்றும் வார்டில் நடந்த பணிகள் குறித்த பட்டியலை பொறியாளர்களை வரவழைக்குமாறும் கூறியுள்ளார்.
அப்போது அவரது கைகளைப் பிடித்து அமரவைக்க முயன்றதாகவும் இதனால் கோபமடைந்த அவர் நகராட்சி ஆணையரை காலணியால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது உதவியாளரையும் தீபிகா ராணி காலணியால் தாக்கினார்.