சாதியின் பெயரை கூறி 15 வயது சிறுவனை மலம் அள்ள வைத்து வன்கொடுமை..!

தர்மபுரி அருகே தலித் சிறுவனை மலம் அள்ள வைத்து வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடியள்ளி ஊராட்சி கோடாரபட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இந்த சிறுவன் கடந்த 15ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சாதி பெயரை கூறி அவனை திட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

மேலும் அவரது கையாலேயே மலத்தை அள்ளி சென்று வேறு ஒரு இடத்தில் வீசும்படி செய்துள்ளதாக மாணவனின் பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதேபோல் மாணவனின் பெற்றோர் தன்னை தாக்கியதாக ராஜசேகரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலித் சிறுவன் மீது வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Leave a Reply