ராஜஸ்தானில் இன்று விசாரணைக்கு வரும் எம்எல்ஏக்கள் வழக்கு…!

ராஜஸ்தானில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கு அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்து சச்சின்க்கும் இடையிலான மோதலால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பரபரப்பு நிலவுகிறது.

 

சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸின் ராஜஸ்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பைலட்டின் ஆதரவாளர்கள் இருவரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டன.

 

முதல்வர் கூட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அம்மாநில சபாநாயகர் சி‌பி ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அவர்கள் 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகரின் நோட்டீசை ரத்து செய்யுமாறு அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

 

இந்த நிலையில் 19 பேரில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டமன்ற உறுப்பினர்களின் மனுவில் திருத்தம் செய்ய விரும்புவதாகவும் திருத்தங்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கூறினார். நீதிமன்றம் இதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருத்தப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் ஒருமணிக்கு விசாரணைக்கு வருகிறது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்க இன்று கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply