இந்தியாவில் கொரோனாவுக்கு பல அமைச்சர்களும், நடிகர்களும் இரையாகி வருகின்றனர். அந்த வகையில் கொரொனா தடுப்பு பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் பணியாற்றி வந்த அமைச்சர் செல்லூர் ராஜூக்கு சில நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று ஏற்பட்டது.இந்த வரிசையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபருக்கு இடங்களுக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் மனைவிக்கு தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஜூலை எட்டாம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.