7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தியாகராஜபுரத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அவ்வழியாக சைக்கிளில் சென்ற அந்த பகுதியை சேர்ந்த 56 வயதான வளையல் வியாபாரி கதிரேசன் என்பவர் வளையல் தருவதாக ஆசை காட்டி சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் வியாபாரியை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவனை கைது செய்தனர்.


Leave a Reply