சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமில்லை..!
கொரொனா வைரஸை கட்டவிழ்த்து விட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் பேச விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் சீனா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் வைரஸ் பரவலை தடுக்காமல் கட்டவிழ்த்து விட்ட முழு பொறுப்பு சீனாவிற்கு உள்ளது என குறிப்பிட்டார்.
சீனா நினைத்திருந்தால் கொரொனா பரவலை தடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பும் சீனாவின் கைப்பாவையாக தான் இருந்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.






