--- --:--:-- --

திருப்போரூர் துப்பாக்கிசூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!

7

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார், முன்னதாக இதய வர்மனை கைது செய்த காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

 

அதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இதய வர்மனின் சகோதரர் நிர்மல், மைத்துனர் வசந்த், ஓட்டுனர் கந்தன் செங்காட்டு பகுதியை சேர்ந்த வாசுதேவன், ரமேஷ் உட்பட 6 பேரை கைது செய்தனர். பின்னர் எம்எல்ஏ இதய வர்மன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் காயத்ரிதேவி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon