தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக காய்கறி சந்தையில் பொருத்தப்படும் கருவி..!

திருமழிசை காய்கறிச் சந்தையில் தனிமனித இடைவெளியை கடைப் பிடிப்பதற்கு ஏதுவாக ஐரிஷ் என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார் . கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை தற்காலிகமாக திருமழிசை நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இங்கு காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகளிடம் தனிமனித இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் ஐரிஸ் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையின் முன்பு இவை பொருத்தப்பட்டு இரண்டரை மீட்டர் அளவில் தனிமனித இடைவெளி கண்காணிக்கப்படும். தவறும்பட்சத்தில் கருவி மூலம் ஒலி எழுப்பப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருமழிசை காய்கறி சந்தையில் இவை பயன்பாட்டிற்கு வந்து இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறினார்.


Leave a Reply