--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 3756 பேருக்கு கொரோனா பாதிப்பு… மதுரையில் தொடர்ந்து அதிகரிப்பு… சென்னையில் நேற்றை விட இன்று அதிகம்

4.4

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.மதுரையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் நேற்றை விட இன்று பாதிப்பு அதிகமாகி, இன்று மட்டும் 1,261பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சகட்டத்திலேயே உள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், சேலத்திலும் பாதிப்பு நிலவரம் கவலையளிப்பதாகவே உள்ளது. தமிழகத்தில் இன்று 3756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 3,051 ஆகும். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 74,167ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று மட்டும் 1261 பேர் பாதிக்கப்பட்டு நேற்றைய பாதிப்பை (1203) சற்று அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 300 ஐ கடந்து 379 ஆக பதிவாகி, மதுரையில் மொத்த பாத்ப்பு 5057 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழக இன்று மேலும் 64 பேர் கொரோணாவுக்கு உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சமீப நாட்களாக தென்மாவட்டங்களில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon