திருமணம் நடந்த மறுநாள் கொரொனாவால் உயிரிழந்த மணமகன்..!
பீகாரில் திருமணம் முடிந்த மறுதினமே மணமகன் இறந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்றும் ஏற்பட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. டெல்லி குர்காமில் வேலை பார்த்த இளைஞரின் திருமணம் பாண்டாவின் உள்ள பாலி கஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றது.
திருமணத்திற்கு முதல்நாள் கடும் வயிற்று போக்காலும், சோர்வாலும் அவதிப்பட்ட அவருக்கு பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமண சடங்குகளில் கலந்து கொண்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.
ஆனால் குடும்பத்தினர் உடனடியாக அவரது இறுதி சடங்குகளை செய்து விட்டதால் சோதனை செய்ய இயலவில்லை. தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் நடத்திய சோதனையில் திருமணம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.






