இந்தியா மீது வீண்பழி சுமத்தும் நேபாள பிரதமருக்கு கண்டனம்!
நட்பு நாடான இந்தியா மீது வீண்பழி சுமத்தி வரும் நேபாள பிரதமர் ஷர்மா பதவி விலக வேண்டும் என்று ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நேபாள அரசு எடுத்து வருகிறது.
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை தயாரிக்க பிரதமர் ஷர்மா தலைமையிலான அரசு அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து தம்மை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் பிரதமர் ஷர்மா குற்றம் சாட்டியிருந்தார். எதிரணியினரை ஆட்சியில் அமர வைக்க இந்திய அரசு சதி செய்வதாகவும் ஷர்மா தெரிவித்திருந்தார்.
பிரதமரின் கருத்துக்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற காட்சியை நிலைக் குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமர் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உள்நாட்டு பிரச்சினைகளை திசைத் திருப்ப நட்பு நாடான இந்தியா மீது வீண் பழி சுமத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
பிரதமர் ஷர்மா பதவி விலக வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தமது கருத்துக்களால் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அமைச்சர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஷர்மா அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.






